Thursday, July 28, 2011

சோரியாசிஸ் தொல்லைகள் குறைய...

சோரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் முதலில் சிலருக்குத் தலையில் பொடுகுபோல ஆரம்பிக்கும். பொடுகு போலவே தோற்றமளித்து பின்னர் மீன் செதில் போல கொட்டத் தொடங்கும். அது மினுமினுப்புடனும் இருக்கும்.

சிலருக்கு முழங்கை, முழங்காலில் வரும். தடிப்புடன் கூடிய சிவந்த படை போல இது இருக்கும். மற்றொரு வகை சோரியாசிஸ், உடல் முழுவதும் பொட்டு அளவிலும், கோலப்புள்ளி, பைசா நாணயம், ஒரு ரூபாய் நாணயம் அளவில் முதுகு, முன்புறத்தில் வெண்மையான நிறத்தில் செதில்படையாக உருவாகும். தொண்டைக் கழலை (டான்சில்) தொற்று நோயால் இது வருகிறது. பாதங்களிலும் இது வரும்.

சிலருக்கு கை நகம் சொட்டையாகி மஞ்சள் புள்ளிகள் நகத்தில் ஏற்படும். அபூர்வமாக இந்த செதில்படை உதடு, பிறப்புறுப்பின் முன் உள்ள மெல்லிய பகுதியிலும் வரும். கண்ணைச் சுற்றிக் கூட வரும். செதில் உதிரும் நோயாளிகளிடம் இதர தோல் நோய்கள் பெரும்பாலும் வருவதில்லை.

காது உள், மேல் மடல்களில் படை போன்று தெரிந்தால் அது சோரியாசிஸ் தானா என்பதை தோல் நோய் நிபுணரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சோரியாசிஸ் நோய்க்கு சித்த மருந்துகளால் பின் விளைவு, பக்க விளைவு இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை. சிலருக்கு இவ்வியாதி பரம்பரையாக வந்துவிடுகிறது. சிவப்பு நிறம், எலுமிச்சை நிறம் உள்ளவர்கள் நல்ல கருப்பு நிறத்தில் உள்ளவரை மணப்பதால் அடுத்த சந்ததிக்குப் பிறக்கும் குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவு.

காலை வெயிலில் சித்த மூலிகை தைலம் தடவி நிற்க வேண்டும். தைலம் தடவாமலும் உடல் முழுவதும் வெயில் படும்படி சூரியக்குளியல் செய்வதால் நோய் சீக்கிரம் குணமாகும்.

சோரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் சிலருக்கு தொண்டையில் நுண் கிருமியின் தொற்று ஏற்படும்போது வருகிறது. இது தோலில் ஒரு சென்டி மீட்டர் சுற்றளவில் வட்ட நாணயங்களைப் பரப்பியது போன்று இருக்கும். இவ்வாறு நுண்கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் சோரியாசிஸ் இரண்டு மாத காலத்தில் மறைந்துவிடும். இந்நோயாளிகளிடம் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின்களும் உடலில் இருந்து குறைந்துவிடும்.

சோரியாசிஸ் நோயில் சிலருக்கு கை மூட்டு, விரல் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இவர்கள் வேப்ப எண்ணெய்யில் தயாரித்த சோப்புகளை உபயோகிக்க வேண்டும். பருத்தி ஆடையை அணிதல் அவசியம்.

உடலில் இருந்து செதில்கள் மூலம் இரும்புச் சத்து அதிகம் வெளியாகிறது. இரும்புச் சத்து பெற அத்திப்பழம், பேரீச்சை, கிஸ்மிஸ் திராட்சை, சுண்டக்காய், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். வியர்வைத் துவாரங்கள் நல்ல முறையில் இருக்கும் வகையில் கோடையில் இரண்டு முறை குளிப்பது அவசியம். ஒருநாள் விட்டு ஒரு நாள் பாசிப்பயறு மாவு கொண்டு குளிப்பது தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து அரிப்பு வராமல் தடுக்கும்.

மன அமைதி இந்நோயை விரைவில் குறைக்கும். மனப் பதற்றம், நரம்புச் சோர்வு நோயை அதிகப்படுத்தும். மற்றபடி சோரியாசிஸ் தொற்று நோய் கிடையாது.

நன்றி... டாக்டர் சுப. சதாசிவம்
இப்படிக்கு...மதுரைக்காரன்

3 comments:

  1. சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நோய்களுக்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணை.

    வணக்கம் நண்பர்களே.....
    நான் மருத்துவர் (Doctor) அல்ல...நான் சோரியாசிஸ் நாேயினால் 12 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளை சாப்பிட்டும் குணமே ஆகாத இந்த நாேய், தேனி மாவட்டம் , மயிலாடும்பாறை அருகே வழிப்பாேக்கில் பாேன சித்தர் கூறிய மூலிகை எண்ணை யை தயார் செய்து உபயாேகபடுத்த 90 நாட்களில் குணமடைந்தது. எந்தவித பத்தியமும் இல்லாமல்.

    சோரியாசிஸ் மற்றும் வெண்குஸ்டம் நாேய் பாதிப்பு உள்ள நண்பர்கள் எனது வாட்ஸ்அப்பில் தொடர்பு காெள்ளவும்.....
    9566750595

    ReplyDelete
  2. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 90 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595
    My video link.
    https://youtu.be/7sm2UQbC_N4

    ReplyDelete
  3. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 100 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும். காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595...

    ReplyDelete